Doraemon In Tamil,Season 20,Episode 15,Part 2 Download & Watch & Read Full Episode in Tamil
Language : Tamil
Duration: 08:10
Size : 25.95MB , 74.28MB
Quality : 360p,720p HD
Dub By:Doraemon Team,Cartoon DM
About This Episode
இந்த Episode, Episode 14 இன் தொடர்ச்சியாக இருக்கிறது.அதனால Episode 14 பார்த்த பிறகு இதை பார்த்தால் உங்களுக்கு ரொம்பவே புரியும்.இந்த Episode ஆரம்பிக்கும் போது நோபிடா ஜிஆனின் இடுப்பில் இருந்த கார்டை எடுத்து "இந்த புகைபடத்துல நீ பார்க்கும் போது நல்லா இல்லை தெரியுமா?,நா சும்மா சொன்னேன்.நீ பார்க்க ரொம்ப அழகாக இருக்கின்றாய்" அப்போது ஜிஆன் "எப்படில எல்லாத்துலயும் நீ மட்டும் வெற்றி பெருகின்றாய்?" என்று கூறி நோபிடாக்கு அடிக்க ஆரம்பித்தான்அப்போது ஜிஆனின் கை அடிக்க மிகவும் மெதுவாக வந்தது.அதனால் அந்த அடியில் இருந்து நோபிடா இலகுவாக தப்பினான்.ஒரு அடிக்கூட நோபிடா மேல படவில்லை.அப்போது நோபிடா "என்னால உன்னை இலகுவாக தடுக்க முடியும்,எப்படி தடுத்தேனு பாரு" நோபிடா தள்ளி விட ஜிஆன் விழுந்து விட்டான்.அப்போது நோபிடா "வாவ் இது எனக்கு ரொம்ப பிடித்திருக்கின்றது.சரி எனக்கு ரொம்ப சோர்வாகிட்டு,நா வீட்டுக்கு போறேன்.மற்ற கார்டூகளை நீங்களே கண்டு பிடிங்க,உண்மையிலே இது ரொம்ப ரொம்ப நல்லா இருக்கிறது." நோபிடா செல்லும் போது அந்த இயந்திரம் "அடுத்து இந்த ஊருலேயே ரொம்ப சோம்பறியாக மனிதன்" என்று சொன்னதும் நோபிடா "ஐயோ! நானாக இருக்குமோ!" என்று சொன்னதும் அவனிடம் அந்த கார்ட் இருந்தது.அதன் பின் அவன் வீட்டுக்கு சென்றான்.அப்போது அம்மாவிடம் நோபிடா "அம்மா இன்னுமா இரவு சாப்பாடு தயாரா வில்லையா?" அப்போது அப்பா "என்ன நோபிடா இப்போ தானே நாங்க சாப்பிட்டோம்.இப்போ தானே இரண்டு அரைமணியாக ஆகுது,உங்க அம்மா கடைக்கு சோப்பிங் போயிருக்காங்க," அப்போது நோபிடா "இப்போ தானே இரண்டு அரைமணியாக ஆகுதா? ஏய் டோரிமான் காலையில இருந்து விளையாடி விளையாடி ரொம்ப பசிக்குது" அதற்கு டோரிமான் "கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடிலகூட இப்படிதான் சொன்னே! (தொடரும்)
Download This Episode 720p (74.28MB),360p (25.95MB)
Watch This Episode Online
(தொடர்ந்து) என்னப் பன்றது? ஆனால் இப்போ தானே கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சாப்பிட்டே! அடித்து சாப்படி ரொம்ப நேரம் இருக்கிறது" அப்போது நோபிடா உடையை மாற்றிவிட்டு தூங்கிக் கொண்டே" முடியல என்னப்பன்ன முடியும் பொருமையாக இருக்க வேண்யது தான்,வயிரு சத்தம் போட்டால் போட்டுட்டு போட்டும்,என்னால ஒன்னுமே பன்ன முடியாது,Doreamon நீ நினைத்தால் கண்டிப்பாக எனக்கு உதவி செய்ய முடியும்" அதற்கு Doraemon "அப்படியா சொல்றே? இது தான் சமக்கும் காத்தாடி,இதை வைத்து நீ வானத்துலேயே பறந்து போகலாம்" அதன் பின் இருவரும் வானத்தில் பறந்து சுற்றினர்.அப்போது நோபிடா "இது ரொம்ப நல்லா இருக்கிறது,இதனால நான் சோர்வே ஆக மாட்டேன் ஜாலியாக இருக்கிறது,அருமை." அப்போது Doraemon "வா நாங்க மேகத்தை வைத்து விளையாடலாம்,நான் மேகத்தில் மனிதன் செய்திருக்கேன் பார்த்தியா? இதை வைத்து நாங்க போல் விளையாட்டு விளையாடலாமா? " அதற்கு நோபிடா "விளையாடலாம், நா இப்போ உன்னை அடிக்கப்போறேன்,இங்க எனக்கு அப்படியே மேதப்பது போல இருக்கிறது. இந்த இடம் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது,நான் இங்கயே தான் விளையாடப் போறேன்." அதன் பிறகு இருவரும் வெகு நேரம் விளையாடி விட்டு கடைசியாக வீட்டுக்கு வந்தனர்.அப்போதும் நோபிடா "என்ன இன்னுமா இரவு சாப்பாடி தயாராக வில்லை" அதற்கு அம்மா "என்ன உனக்கு ஆச்சி? இவ்வளவு சீக்கிரமாக கேக்குரே? இன்னும் நேரமிருக்கிறது,சரி இரு நான் ஏதாவது கொண்டு வாறேன்."
அதன் பின் இருவரும் சாப்பாடு சாப்பிட உட்கார்ந்தனர்.அப்போது நோபிடா "என்ன இந்த நேரமே போக மாட்டிக்கு,அம்மா இதை தானே கொடுத்திருக்காங்க,இதையாவது சாப்பிடுவோம்" அப்போது டோரிமான் "சரி அதை நீ சாப்பிடு ஆனால் இரவு சாப்பாட்டுக்கு இன்னும் நேரமிருக்கிறது" அப்போது நோபிடா அதை சாப்பிட எடுத்து வாயில் வைக்கும் போது அவனால் கடிக்க முடியவில்லை" அப்போது டோரிமான் "சரி எனக்கும் பசிக்குது நானும் இதை சாப்பிடுகின்றேன்,உனக்கு என்ன ஆச்சி?" அப்போது அம்மா நோபிடாவின் பல்லை பார்த்து "உன்னோட பல்லை சத்தம் செய்ய வேண்டும்,உன் பல்லுல தான் பிரச்சினையே! சரி உன்னை நான் பல் வைத்தியரிடம் காட்டுறேன் அது வரைக்கும் நீ பொருமையாக இரு சரியா?" அப்போது அம்மா பல் வைத்தியரிடம் நோபிடாவை அழைத்து சென்றாள்.அப்போது நோபிடா "வேண்டாம் வலிக்குது,முடியாது,இதையே இன்னும் எவ்வளவு நேரம் பன்னுவீங்க? " அதற்கு வைத்தியர் "நான் இன்னும் உன்னை எதுவுமே செய்யவில்லையே! கவலைப்படாமல் இரு எதுவும் ஆகாது,வெறும் பத்து நிமிடம் தான்" அதற்கு நோபிடா "பத்து நிமிடமா? முப்பது நிமிடம் ஆச்சிங்க,விட்டுதுங்க" அப்போது வெளியே இருந்த Doraemon "நோபிடாக்கு எதுவுமே ஆகாமல் இருந்தால் போதும்,நோபிடா பொருமையாக இரு (அதன்பின் அனைவரும் வெளியே வந்தனர்) நீ நல்லா தானே இருக்கிறாய்? என்னது நல்லா இல்லையா?" அப்போது அங்கு சிசுக்கா வந்து "ஏய் நோபிடா நீங்க இங்கயா இருக்கீங்க? ஒரு பெரிய பிரச்சினை ஆகிடுச்சு" அதற்கு நோபிடா "ஏன் சிசுக்கா இப்படி ஓடி வருகின்றாள்? ஏன் என்று தெரியவில்லையே" சிசுக்கா வந்து ஜிஆனுடைய விழாவை பற்றி சொல்லி இருவரையும் இங்கு அழைத்து சென்றாள்.அப்போது சிசுக்கா "உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? அவனுடைய விழாவை நினைத்து ஜிஆன் ரொம்ப சந்தோசமாக இருக்கான்." அதற்கு சுனிவோ "அவன் மட்டும் தான் சந்தோசமாக இருப்பான்" அப்போது அங்கு மேடையில் ஜிஆன் வந்தான்.அனைவரும் பயந்தனர்.
அப்போது ஜிஆன் "எல்லாருக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள்ல புது வருடத்திற்கு நான் பாடும் பாட்டை எல்லாரும் கேட்டு ரசிங்கல" அப்போது ஜிஆன் பாட ஆரம்பித்தான். "புத்தம் புது பாட்டு,புத்தம் புது பாட்டு,வைக்க போறேன் உனக்கு வேட்டு,அதை நீயும் கேட்டு சரில நா இப்போ அடுத்த பாட்டை பாடப் போறேன்" அப்போது நோபிடா "சரி எப்போ தான் கடைசி பாட்டை பாடுவாய்?" அதற்கு ஜிஆன் "என்னல இப்போ தானே முதல் பாட்டையே ஆரம்பித்திருக்கின்றேன்,அதுக்குள்ள கடைசி பாட்டா? அதற்கெல்லாம் இன்னும் அரை மணிநேரம் ஆகும்.பச்சை மிளகாய் காரம்" அப்போது Doraemon "இவனுக்கு அரைமணிநேரம்னா உனக்கு ஒன்னரை மணிநேரம்,அதாவது தொன்னூரு நிமிடம்." அதற்கு நோபிடா "என்னது எல்லால அவ்வளவு நேரம் தாங்க முடியாது,இதுக்கு மேல நான் பொறுத்துக்க மாட்டேன்,இருந்தாலும் விட மாட்டானே!"அப்போது ஜிஆன் "பச்சை மிளகாய் காரம்,பன்னிரெண்டு மணி நேரம்" அந்த கேக்க முடியாத பாட்டை நோபிடா கேட்டு அப்படியே மயங்கி விழுந்து விட்டான்.சில நிமிடங்களுக்கு பிறகு Doraemon " நோபிடா எழுந்திடு" நோபிடா "டோரிமான் எல்லாரும் எங்கப் போனாங்க?" Doraemon "ஜிஆனோட விழா முடிந்து விட்டது,அதனால எல்லாரும் அவங்க அவங்க வீட்டுக்குப் போயிட்டாங்க.இப்போ ரொம்ப நேரம் ஆகிட்டு,இப்போ இருக்கும் நேரம் படி அப்போது நான்கு மணி முப்பது நிமிடமாகுது.உன் கணக்கு படி சொல்லனும்னா உனக்கு இன்னும் ஆறு மணிநேரம் இருக்கிறது." நோபிடா "என்னது ஆறு மணிநேரமா? ஏதாவது செய் டோரிமான்" அதற்கு Doraemon "எனக்கு தெரியும் இதை தான் நானும் எதிர்பார்த்தேன்,மூன்று மடங்கு வேகமாக போக வைகக்கூடிய கடிகாரம்.
எல்லாத்தை மெதுவாக மாற்றும் கடிகாரத்தை எடுத்து விட்டு எல்லாத்தையுமே வேகமாக மாற்றும் கடிகாரத்தை வைக்கின்றேன்.(அப்போது டோரிமான் மிகவும் வேகமாக கதைத்தான்) நீ கவலை படாதே இப்போ எல்லாமே சரியாகிட்டு நடந்ததையெல்லாம் மறந்துடு,நீ நினைத்தெல்லாம் நடக்கும்." அதற்கு நோபிடா "நீ பேசியது எதுவுமே எனக்கு புரியவில்லை." அப்போது டோரிமான் "இது எதிர்மறையானதுல எல்லாமே வேகமாக தான் இருக்கும்.நான் உன்னோட கடிகாரத்தை உனக்காக வேகமாக வைத்து விட்டேன்,நோபிடா இனி முன்னவிட இப்போ எல்லாமே ரொம்பவே வேகமாக இருக்கும்,கொஞ்சம் மேலப்பாரு" (அப்போது பறவைகள் மிகவும் வேகமாக சென்றன) நோபிடா "என்ன இது பறவைகலெல்லாம் ரொம்ப வைகமாக பறந்துட்டு இருக்கிறது,அடேங்கப்பா என்ன எல்லாருமே ரொம்ப வேகமாக போயிட்டு இருக்காங்க" அதற்கு டோரிமான் "என்னப்பா நீ மெதுவாக இருந்தாலும் மெதுவாக இருக்குனு சொல்றே,வேகமாக இருந்தாலும் வேகமாக இருக்குனு சொல்றே உனக்கு என்ன தான் வேணும்? நீ தானே எல்லாமே வேகமாக இருக்கனுமென கேட்ட அதனால எல்லாத்தையிம் வேகமாக மாற்றி விட்டேன்." அதற்கு நோபிடா "ஐயோ! நான் சொல்வதை ஏன் நீ புரிந்து கொள்ள மாட்டடிக்கின்றாய்? காப்பற்றுப்பா டோரிமான் நீ நினைத்தால் மட்டும் தான் ஏதாவது செய்ய முடியும்." அதற்கு Doraemon "சரி,சரி அழாதே! இது தான் எல்லாத்தையும் பாதியாக மாற்றும் கடிகாரம் இப்போ நான் இதை எடுத்து விட்டு இதை ஒட்டுரேன்,இப்போ எவ்வளவு வேகமாக போகுதுனு பாரு,இதை விட வேகமாக என்னால எதையுமே பன்ன முடியாது பாத்துக்க,இருப்பதில் இது தான் கூடிய வேகம் சரியா?" அதன்பின் நோபிடா பாதையில் சென்றான்.அப்போது அனைவரும் மின்னல் வேகத்தில் சென்றனர்.அப்போது நோபிடா "எல்லாரும் நடக்குறாங்களா? இல்லை பறக்குறாங்களா?" அப்போது நோபிடா "இந்த பையன் மட்டும் ஏன் இப்படி இருக்கான்,எல்லாரும் வேகமாக செல்லும் போது இவன் மட்டும் ரொம்ப ரொம்ப வேகமாக இருக்கின்றான்.
நோபிடா சீக்கிரம் என்ன மெதுவாகவே நடந்துட்டு இருக்கின்ற?" அதற்கு நோபிடா "நா என்னப்பன்றது? நான் வேகமாக ஓட தான் முயற்சி பன்றேன்! ஆனாலும் என்னால ஓட முடியல,என்னது இது அதுகுல்ல ரொம்பவே இருட்டாகி விட்டது." அப்போது இருவரும் வீட்டுக்கு வந்துவிட்டனர்.அப்போது அம்மா கதவை திறந்து "ஏன் இவ்வளவு தாமதமாக வாரிங்க? உங்களுக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இருக்க மாட்டிக்கு! என்ன சொன்னாலும் கேட்க மாட்டிங்களா?" அதற்கு நோபிடா "ஏன் இப்படி கத்துராங்க?" அதற்கு Doraemon "நா இன்னைக்கு விளையாடிட்டு தாமதமாக வாரோம் இல்லையா அதனால இரவு சாப்பாட்டுக்கு தாமதமாகிட்டுனு கத்துராங்க அவ்வளவுதான்." அப்போது நோபிடா இரவு சாப்பாடு நேரம் வந்துட்டு என ரொம்ப சந்தோசமாக சாப்பிட உட்கார்ந்தான்.அப்போது Doraemon வேகமாக சாப்பிட்டு விட்டான்.ஆனால் நோபிடா சாப்பாட்டில் கை வைக்கவில்லை.அப்போது நோபிடாவின் அப்பாவும் சாப்பிட்டு முடிந்து விட்டார்.அப்போது அம்மா வந்து "என்ன நோபிடா எவ்வளவு நேரமாக சாப்பிடுவே? சாப்பிட்டது போது கொடு" அதற்கு நோபிடா "நான் இன்னும் சாப்படவே ஆறம்பிக்கவில்லை பசிக்குதுமா! நீ எப்படி அவ்வளவு சீக்கிரமாக சாப்பிட்டே! " அதற்கு Doraemon "பார்த்தல இது தான் நேரமே,நீ கொஞ்சமாவது வேகமாக இருக்கனும்,இப்போ போய் தூங்கலாம் வா" அதற்கு நோபிடா "அப்படினா சீக்கிரம் விடிந்துடுமா?" அப்போது Doraemon "என்ன நோபிடா இன்னைக்கு நல்லா விளையாடுனீயா? நீ கேட்டது போல நான் உனக்கு நிறைய நாளை கொடுத்துவிட்டேன் இல்லையா?" அதற்கு நோபிடா "ஒரு.விஷயம் சொல்லவா? இந்த கடிகாரம் கைல இருப்பதனால தானே எல்லாமே ரொம்ப வேகமா போயிட்டு இருக்கு,அப்படினா எனக்கு எனக்கு இது நிறைய தேவைபடுகின்றது,இங்க பாரு அடுத்த வருடம் சீக்கிரமாக வரப்போகுது,சரி நாட்காட்டியை பார்த்தால் இன்னும் எத்தனை நாள் இருக்குனு தெரிஞ்சிடும்.சரி என்ன ஆறம்பிக்கலாமா? ஒன்னு…பத்து...பதினைந்து" அதுக்கு Doraemon "நோபிடாக்கு நான் எவ்வளவு பன்னாலும் போதாது. எப்போ பாரு இப்படி பன்னிட்டு இருக்கான்" என்று சொன்னதும்.இந்த Episode முடிந்தது.அடுத்து புதிய Episodeல சந்திப்போம்.
How To Download?
Read & Watch And Download All Tamil Doraemon Episodes On This Site