Language : Tamil
Duration: 08:10
Size : 25.92MB , 72.94MB
Quality : 360p,720p HD
Dub By:Doraemon Team,Cartoon DM
About This Episode
இந்த Episodeல நடக்க இருப்பதை நாங்க இப்போ ஒரு கதையாக பார்க்கலாம்.இந்த Episode ஆரம்பித்த உடனே நோபிடா அம்மாவின் நண்பியும் நண்பியின் மகள் பெசுக்கோவும் நோபிடாவின் வீட்டுக்கு வந்தனர்.அப்போது நோபிடா அம்மா "வாங்க,வாங்க உங்களை பார்த்து எத்தனை நாளாச்சு,பருவாயில்லையே பெசுக்கோ முன்ன பாரத்ததை விட இப்போது நல்லா வளர்ந்துட்டியே!" அப்போது நோபிடா "பெசுக்கோ வந்திருக்கா,அதுல என்ன பிரச்சினைனு தெரியுமா? அவள் எதுக்கு எடுத்தாலும் அழுதுகிட்டே இருப்பாள்.என்னால சமாளிக்கவே முடியாது,நான் விளையாடப் போறேன் டோரிமான்,நீ வீட்ட கவனமாக பாத்துக்கோ" என்று சொல்லிவிட்டு நோபிடா வீட்டை விட்டு வெளியேறி விட்டான்.அதற்கு Doraemon "நோபிடா நில்லு வர வர ரொம்ப மோசமாக போயிட்டு இருக்கான்.சின்னப்பசங்க கிட்ட நாங்க ரொம்ப நல்லபடியாக நடந்துக்க வேண்டும்." அப்போது பெசுக்கோ. அம்மா "அந்த துணிக்கடைக்கு நான் போனேன்,அங்கு எல்லாம ரொம்ப மலிவாக கிடைக்குது" என்று கதைக்கும் போது பெசுக்கோ படியேறி நோபிடா அறைக்கு வந்தாள்.அதற்கு Doraemon "ஹலோ! பெசுக்கோ நோபிடா அண்ணாக்கு ஒரு சின்ன வேலை அதான் அவன் வெளியில போயிருக்கான்,இப்போ நாங்க என்னப் பன்னலாம் பெசுக்கோ,உனக்கு என்ன பிடிக்குனு சொல்லு,ஏதாவது விளையாட்டு விளையாடுமா? உனக்கு என்ன வேணும்னு சொல்லு என்கிட்ட எல்லாமே இருக்கிறது." அதற்கு பெசுக்கோ ஒரு புத்தகத்தை காட்டி "எனக்கு இது தான் வேணும்,இந்த புத்தகத்தை படிக்க முடியுமா?" அதற்கு Doraemon புத்தகத்தை மகிழ்ச்சியோடு வாங்கி சத்தமாக படிக்க ஆறம்பித்தான்.(தொடரும்)
Download This Episode 720p (72.94MB),360p (25.92MB)
Watch This Episode Online
(தொடர்ந்து) "இந்த புத்தகத்தோட தலைப்பு அழகான கடல்கன்னி,சரி நாங்க படிக்க ஆறம்பிக்கலாம்." பெசுக்கோ பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்.அப்போது டோரிமான் கதையை ஆறம்பித்தான். "ஒரு அழகான கடல்கன்னி இளவரசி இருந்தாங்கலாம்.அவங்களும் ஒரு இளவரசரும் ரொம்ப நல்ல நண்பர்கள்,ஒரு நாள் திடீரென பெரிய புயல் வந்தது.அந்த இளவரசர் கப்பல் உள்ள இருந்து கடல் உள்ள விழுந்துட்டாரு.இந்த கடல்கன்னி தான் அவங்கள காப்பாத்துனாங்க,இந்த கடல்கன்னிக்கு ஒரு சதாரண மனிதன் போல ஆக ஆசை,அவங்களோட குரலுக்கு பதிலாக அவங்களுக்கு கால்கள் வேணுமென ஆசைப்பட்டாங்க,அவங்களுக்கு கால்கள் கிடைத்தன.ஆனால் பாவும் இப்போ அவங்களால பேச முடியாது,ஆனால் பாவும் அந்த இளவரசன் பக்கத்து நாட்டு இளவரசியதான் கல்யாணப்பன்னிக்க வேண்டியதாக போச்சி,அந்த கடல்கன்னி இளவரசி இளவரசருக்காக தான் மாறுனாங்க,இப்போ இந்த இளவரசரை கல்யாணப்பன்னிக்க முடியலனா அவங்க கடலோட கடலாக போகிடுவாங்க,அப்படி ஏதும் நடக்க கூடாதுனுனா அவங்க அந்த இளவரசனுடைய உயிரை எடுத்தே ஆகனும்.இது தவிர வேற வழியே இல்லை,அவங்க எவ்வளவு முயற்சி செய்யும் அவங்களால எதுவுமே பன்ன முடியவில்லை,கடைசியில் அந்த இளவரசி நுரையாக மாறி கடலோட கடலாக கலந்துட்டாங்க.ஆனால் அந்த இளவரசருக்காக தான் அவங்க அவங்க உலகத்தை விட்டே வந்தாங்க,அவங்க ரொம்ப கஷ்டப்பட்டாங்க." என்று வாசித்த பிறகு" கதை முடிந்து விட்டது,இது ரொம்பவே சோகமான கதை(அப்போது பெசுக்கோ அழுதாள்) பெசுக்கோ அழாதே இது வெறும் கதை தான்."
அதற்கு பெசுக்கோ "ஆனால் கதையாக இருந்தாலும் உண்மையாக நடந்தது தானே" என்று கூறி சத்தமாக அழுதாள்.அப்போது அம்மா வந்து "என்ன ஆச்சி? அடடடா உனக்கு என்ன ஆச்சு பெசுக்கோ?" அதற்கு பெசுக்கோ "Doraemon தான் இதெல்லாத்துக்கும் காரணம்" அதற்கு அம்மா "எதுக்காக இவள இப்போ அழ வைத்தே? டோரிமான் உனக்கு இருக்கு,சரி வா பெசுக்கோ நாங்க போய் கேக் சாப்பிடலாம்." அதற்கு Doraemon "அம்மா நா எதுவுமே பன்னல அதுக்கு இந்த புத்தகம் தான் காரணம்,அந்த பொன்னு தான் இதை படிக்க சொன்னாள்,என்னை நம்புங்க இதுல என் தப்பு எதுவுமே இல்லை,இந்த கதை சோகமாக முடிந்தால் நான் என்ன பன்ன முடியும்? நான் இதை உடனே எப்படியாவது மாற்ற வேண்டும்,இந்த சாப்பத்தை போட்டு விட்டு இந்த கதை புத்தகம் உள்ள போகப்போறேன். இதை தவிர வேற வழியே இல்லை." Doraemon அந்த கதை புத்தகம் உள்ளே சென்னான்.அப்போது அங்கு நீரினுள் ஒரு அரண்மனை இருந்தது அதை நோக்கி டோரிமானோ சென்னான்.அதினுள் அரசி "என்னோட மகளான உனக்கு இப்போ பதினைந்து வயதாகிட்டு,இனிமேல் நீ கடலுக்கு மேலயும் போகலாம்,நான் உனக்கு அனுமதி தாறேன்." அப்போது இளவரசி "உண்மையாகவா! பிரமாதம்" அதற்கு தோழிகள் "சீக்கிரம் மேல போ! போய் வானத்தைப்பார்,ரொம்ப அழகாக இருக்கும்,இப்போ இரவு அதனால இப்போ நிலாவும் இருக்கும்.அது பார்க்க ரொம்ப நல்லா இருக்கும்." அப்போது அரசி "அனால் நீ மனிதர்களுக்கிட்ட ஜாக்கிரதையாக இருக்கனும்." அப்போது இளவரசி மேலே சென்றாள்.அப்போது நோபிடா "பிரமாதம்,இவங்கள பின் தொடர்ந்தால் சரியாக இருக்கும்." மேல சென்ற இளவரசி "இதான் நிலாவோட வெளிச்சமா? இது ரொம்ப அழகாக இருக்கு." அதற்கு டோரிமான் "எங்கப்போறாங்க? ஒரு வேளை கடல்கன்னி இளவரசி இளவரசை சந்திக்க போறாங்களோ!"
அப்போது இளவரசி ஒரு கப்பலை பார்த்தாள். "அது என்னவாக இருக்கும்? (டோரிமான் நீரிலிருந்து வெளியில் வந்து பறந்த படி நடப்பதை பார்த்தான்) இவ்வளவு பெரிய கப்பலா? " அப்போது ஒரு இளவரசர் அந்த கப்பலில் இருந்தார்.அப்போது இளவரசி "இவரு பார்க்க எவ்வளவு அளகாக இருக்காரு" அப்போது இளவரசி "இன்னை நிலா பார்க்க ரொம்ப அழகாக இருக்கிறது." அதற்கு இளவரசி " இவரு இளவரசரா? பார்க்க ரொம்ப அழகாக இருக்காரு வீரமானவராகவும் தெரிராரு" அப்போது இளவரசர் "மேகங்கள் வேகமாக நகருது,ஒரு புயல் வரப்போகுது." அப்போது இளவரசி "அடடா என்ன ஆச்சி திடீர்னு நிழவு மறைந்து போச்சி." அப்போது Doraemon "இதுவரைக்கும் கதை நல்லா தான் போகுது இப்போ வரும் புயல்ல இருந்து அவரை அவங்க காப்பாற்றுவாங்க." அப்போது ஒரு புயல் வந்தது.அந்த கப்பல் புயலில் அடிப்பட்டது,இளவரசர் கடலினுள் விழிந்து விட்டார்.அப்போது Doraemon "கதையில கூட இவ்வளவு பயங்கரமான புயல் வருது,அந்த கடல்கன்னி எங்க போயிட்டாங்க?" அப்போது அந்த இளவரசி இளவரசரை காப்பற்றினாள்.அப்போது Doraemon "அப்படினா இந்த இடத்துல தான் அவங்க இளவரசனை காப்பாற்றி இருக்காங்க,இப்போ தான் கதையே ஆறப்பித்திருக்கின்றது." அதன் பின் காலையானது.அப்போது அந்த கடல்கன்னி "இளவரசரே உங்களுக்கு எதுவுமே ஆகவில்லையே!" அப்போது ஒருவர் "யாருக்காவது உதவி தேவையா? யாராவது இருக்கிங்களா? யாராவது தண்ணிக்குள்ள இருந்தால் வ்ளியில வாங்க.(அப்போது இளவரசை அங்கு விட்டு விட்டு இளவரசி மறைந்தாள்.) யாரது சீக்கிரம் போங்க அவரை நாங்க காப்பாற்ற வேண்டும்."
அப்போது இளவரசை ஒரு கப்பலில் ஏற்றினர்.அப்போது அங்கிருந்த ஒருத்தர் "அடடடா இவரு நம்ம பக்கத்த இராச்சித்தோட இளவரசர்" அப்போது இராச்சிய இளவரசி "அம்மா என்ன சொல்லுரீங்க? இளவரசரே என்மாச்சி கொஞ்சம் கண்ணை திறந்து பாருங்க!" அப்போது கடல் கன்னி இளவரசி மனநிம்மதியும் சென்றாள்.ஆனால் Doraemon இது வரைக்கும் கதையில் எதையும் மாற்றவில்லை! என்னனென்றால் டோரிமான் கதையை மாற்றினாள் இந்த கதையே மாறிடும்.அப்போது தோழிகள் "ஆமா உனக்கு என்ன ஆச்சு? எப்போதும் துரு துருனு இருப்பே! இப்போ அமைதியாக இருக்கே! இப்படியே இங்க உட்காராமல் எல்லாருக்கூட விளையாடலாம்ல" அப்போது இளவரசி அங்கிருந்து புறப்பட்டு "அந்த இளவரசரை மறுபடியும் எனக்கு பார்க்கனும்னு ஆசையாக இருக்கிறது,அதுக்கு நல்ல வழி இருக்கிறது." அப்போது அவள் ஒரு மந்திரவாதியிடம் சென்றாள்.அப்போது மந்திரவாதி "சாதாரண மனிதன் போல இருக்க ஆசைப்படுகிறாயா?" இளவரசி "ஆமா நீங்க தான் எனக்கு உதவி செய்ய வேண்டும்.உங்களை விட்டால் எனக்கு வேற வழியே இல்லை" மந்திரவாதி "கவலையை விடு,நா உனக்கு ஒரு மருந்து தயாரித்து தருகின்றேன்,அந்த மருந்தை சாப்பிட்தால் இந்த வாலுக்கி பதிலாக உனக்கு கால்கள் வந்துடும்." அதற்கு இளவரசி "எனக்கு அது தான் வேணும்,நீங்க செய்யும் இந்த உதவிக்கு மிக்க நன்றி." அதற்கு மந்திரவாதி "நான் சொலுவதை கவனமாக கேட்டுக்கே! ஒரு கடல்கன்னியால சாதாரணமாக 300 வருடங்கள் வரைக்கும் உயிர் வாழ முடியும்.ஆனால் சாதாரண மனிதன் போல மாறினாள் 80 வயசுக்கு மேல உங்களால உயிர் வாழ முடியாது." இளவரசி "வெறும் 80 வருடமாக இருந்தாலும் நான் கண்டிப்பாக அந்த இளவரசர் கூட தான் வாழ்வேன்" மந்திரவாதி "இதுல ஒரு பிரச்சினை இருக்கிறது,நீ நினைப்பது நடக்க இல்லனா நீ கடல்ல நுரையாக மாறிடுவே! கடலோட கடலாக கலந்து போயிடுவே!"
இளவரசி "அது நடக்க வாய்ப்பில்லை,எனக்கு சீக்கிரமாக அந்த மருந்தை கொடுங்க." அதற்கு மந்திரவாதி "அப்படினா உனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை உனக்கு கால்கள் வேண்ம்னு கேக்குற! ஆனால் கால்கள் கிடைத்துக்கு பின்னாடி உன்னால பேச முடியாது,ஏன் என்றால் என்னோட குரல் கேட்கவே கொடுரமாக இருக்கிறது.உன்னோட அழகான குரலை எனக்கு கொடுத்தால் நல்லா இருக்கும்,நான் உனக்கு உதவி பன்றேன் அதானால நீயும் எனக்கு உதவி செய்ய வேண்டும்.நீ எனக்கு உதவி பன்ன மாட்டியா? சரி உனக்கு நான் அந்த மருந்தை கொடுக்க மாட்டேன்." அப்போது Doraemon அங்கு வந்து "இது ரொம்ப அனியாயம்,ஒழுங்காக அவங்க கேட்ட கால்களை கொடுத்து விடு நீ பன்றது ரொம்ப தப்பு,தயவுசெய்து கொஞ்சமாவது மனசாட்சியுடன் நடந்துக் கொள்." மந்திரவாதி "என்ன இது? திடீரென்று எங்கிருந்து வந்தது? யாரு என்ன சொன்னாலும் என்னால எதையும் இலவசமாக கொடுக்க முடியாது." அதற்கு Doraemon "இரு அதுக்கும் ஒரு வழி வைத்திருக்கேன்,மாற்றும் இயந்திரம்,இளவரசி கால்களுக்கு பதிலாக நீங்கள் எதை கொடுக்க விருப்புகின்றீர்கள்?" அதற்கு இளவரசி "இரு பார்க்கின்றேன்,உங்களுக்கா இந்த நகையை கொடுக்கின்றேன்." அதற்கு மந்திரவாதி "அதை வைத்து நான் என்னப்பன்னுவேன்? நா கொடுக்க போற மருந்து எவ்வளவு விலைமதிப்பானதுனு உனக்கு தெரியுமா? இந்த மாதிரி நகையை கொடுத்து சரி பன்ன நினைக்காதே! இதை தயாரிக்க நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன்னு உனக்கு தெரியுமா? நான் உன்கிட்ட அப்படி என்ன கேட்டேன்? அழகான குரலை தானே கேட்டேன்." அப்போது அந்த இயந்திரம் அதை வழங்கி மாற்றியது.அப்போது Doraemon "இந்த இயந்திரத்தை பயன்படுத்தும் போது நாங்க கேக்குற பொருளை அவங்களுக்கு கொடுக்க விருப்பமில்லைனாலும் நமக்கு கொடுத்துதான் ஆகனும்." அப்போது அந்த மந்திரவாதி "அப்படினா நா வாழ்கை முழுக்க இந்த குரலோட தானா இருக்கனுமா?" அப்போது அந்த இளவரசி "நீங்க செய்த உதவிக்கு மிக்க நன்றி,உங்களுக்கு நா எப்படி நன்றி சொல்வதுனு புரியல நீல ஒக்டோபஸ்" அப்போது Doraemon "என்னது நீல ஒக்டோபஸா?" என்று ஆச்சரமாக கேட்டதும் இந்த Episode முடிந்தது.இந்த Episode இன் தொடர்ச்சி அடுத்த Episodeல நாங்க பார்க்கலாம்.
How To Download?
Read & Watch All Tamil Doraemon Episodes And Read All Tamil Cartoons On This Site