Language : Tamil
Duration: 08:06
Size : 28.1MB , 76.09MB
Quality : 360p,720p HD
Dub By:Doraemon Tamil Team
About This Episode
சுனிவோவும் ஜிஆனும் பட்டம் விட்டுக்கொண்டிருந்தனர். அப்போது ஜிஆன் "ஏலே! சுனியோ உன்னோட பட்டம் அசத்தலாக இருக்குதுல" அதற்கு சுனிவோ "இந்த பட்டத்தை பிரான்ஸ்ல செய்தாங்க எங்க அப்பா அங்கிருந்து வாங்கி கொண்டு வந்தாரு" அதை பார்த்த நோபிடா வீட்டுக்கு சென்று "Doraemon வா வெளியே போய் பட்டம் விடலாம், என்னது நீ வீட்ல இல்லையா? ஏன் வீட்ல இருந்துட்டே இல்லனு சொல்றே? வா வெளியே போய் பட்டம் விடலாம்" அதற்கு காட்டிலுக்கு அடியில் இருந்த Doraemon "இல்ல வெளியே ரொம்ப குளிராக இருக்கிறது" அதற்கு நோபிடா "இதெல்லாம் ஒரு காரணமா? வா போகலாம்" அதற்கு Doraemon "இங்க பாரு நா ஒரு ரோபோட் பூனை எனக்கு இந்த மாதிரி குளிராக இருப்பது பிடிக்காது, உன் கூட நா வரமாட்டேன்" அப்போது கட்டிலை நோபிடா ஒரு பக்கம் சாய்த்தான். Doraemon "நீ என்ன பன்றே? ஏன் தான் இந்த குளிர்காலம் வருடம் வருடமாக வருதோ தெரியாது" அதற்கு நோபிடா "உனக்கு குளிர்னா பிடிக்காதா? எதுக்கு நீ அது வந்தால் ஒரு மாதிரி அகிடுரே? பயந்தாங்கோழி உனக்கு தைரியம் இல்லை. அதற்கு டோரிமான்" என்னையா அப்படி சொன்னே? இன்னைக்கு அந்த குளிரா இல்ல நானானு ஒரு கை பார்த்திடலாம்" டோரிமான் கதவை தைரியமாக திறந்தான். (தொடரும்)
Download This Episode 720p (76.09MB),360p (21.1MB)
(தொடர்ந்து) குளிர் காற்று அடித்தது, அதை அவனால் தாங்க முடியாமல் உடனே கட்டிலுக்கு அடியில் ஒழித்தான்.அப்போது நோபிடா "ஏன் தான் நீ இப்படி இருக்கியோ? இங்க பாரு உன்னோட டிவைசை வைத்து ஏதாவது உதவி பன்ன முடியாதா?" அதற்கு Doraemon "என்கிட்ட அந்த மாதிரி ஏமாவது இருக்கானு பார்க்கிறேன்! இது தான் குளிரை சமாளிக்கும் டிவைஸ்,இதை எப்படி பயன்படுத்த வேண்டும்னா முதல்ல இதை நாங்க நம்ம தலையில மாட்ட வேண்டும் அப்பறம் ஒரு வாய்த்தை சொல்ல வேண்டும்.(அதை நோபிடா டோரிமானுடைய தலையில் மாட்டினான்) நீ இப்போ என்ன காரியம் பன்னே? இதை நம்ம தலைல மாட்டினால் மூன்று மணிநேரத்திற்கு வெளியில எடுக்க முடியாது, இனிமேல் நான் உன்னிடம் எதுவும் சொல்ல மாட்டேன்,அச்சச்சோ!" டோரிமானை நோபிடா பட்டம் விடும் இடத்திற்கு அழைத்து சென்றான். அப்போது நோபிடா "அடேங்கப்பா எல்லா காத்தாடியும் எப்படி பறக்குதுனு பாறேன்" அதற்கு டோரிமான்" காற்று அடிக்கும் போது காற்றாடி பறக்காதா? என்ன" ஜிஆன் "ஏலே! நோபிடா நீயா வாலே ஆமா, இந்த இடத்துல காத்தாடிய வைத்துக் கொண்டு நீ என செய்றே?" அதற்கு சுனிவோ "ஒருவேளை இங்க வந்து தான் எப்படி காத்தாடி விடுவதுனு கற்றுப்பான்போல இருக்கே!" அதற்கு நோபிடா "நா நாருனு காட்டுறேன். டோரிமான் இதை கொஞ்சம் தைட்டா பிடி,நான் தயார்" அதை டோரிமானிடம் கொடுத்து விட்டு சிறுது தூரம் சென்று விட சொன்னான்.அதை இழுத்து கொண்டு ஓடித்திரிந்தான்,அது பறக்கவே இல்லை.
அதன்பிறகு நோபிடாக்கு வியர்த்து ஆனால் டோரிமானால் குளிரை தாங்க முடியவில்லை.அப்போது டோரிமான் "எனக்கும் இப்போது வியர்குது கொஞ்சம் டிசு இருந்தால் கொடு, நம்ம எதுக்கு தான் வெளியே வந்தோம்னு இருக்கு! டோரிமான் குளிரை தாங்காமல் ஓடினான் பட்டம் அவனின் காலில் சிக்கியது. அதன் பிறகு ஒரு தண்ணீரினுள் விழுந்து விட்டான். அப்போது அங்கு சிசுக்கா வந்து "ஹாய் நோபிடா, கொஞ்சம் குளிருதுல" அப்போது டோரிமானுடைய கருவி அவனை இழுத்து பிடித்தது அதனால் அவன் வேகமாக கட்டினான். அதறகு சிசுக்கா "உனக்கு என்னாச்சி டோரிமான்?" அதற்கு நோபிடா "அது வந்து, டோரிமான் ஒரு வித்தியாசமான டிவைசை மாட்டி இருக்கான் அது தலையில இருக்கும் போது யாரவது குளிர பற்ற கதைத்தால் இப்படி ஆகும். நீ வரும்போது குளிருதுனு சொன்னல அது தான் இங்க பிரச்சினையே" அதற்கு சிசுக்கா "அப்போது நான் தான் பிரச்சினை பன்னனா? என்னை மன்னித்து விடுங்கள்" அதற்கு Doraemon "இத என்னால போட்டிரிக்க முடியாது, எனக்கு தலை வழிக்குது, நா கழட்ட போறேன், வந்து உதவி செய் நோபிடா, என்ன பார்த்துகிட்டு இருக்கே! சிசுக்கா வந்து உதவி செய், இது ரொம்ப தைட்டா இருக்கு. நான் தான் சொன்னல மூன்று மணி நேரத்துக்கு இதை கழட்டவே முடியாது" அப்போது ஜிஆன் "ஏலே சுனிவோ கொஞ்சம் நேரம் கழித்து உன்னுடைய பிரன்சிப் பட்டத்தை நா காத்துல விடவாலே? ஏலே இப்போது கேட்கலலே ரொம்ப குளிருதுல அப்பறம் பார்த்துப்போம், என்னல நோபிடா பட்டத்தை விடாம இருக்கே! முயற்சி செய்து கலைத்து போய்ட்டியா?" அப்போது சுனிவோ "இவ்வளோ முயற்சி செய்தும் என்ன பயன் உனக்கு பட்டமே விட தெரியல" அப்போது Doraemon "சரி, இவங்க எல்லாரும் மூக்கு மேல கை வைக்கும் அளவுக்கு நான் ஏதாவது பன்றேன், இது தான் புது பட்டம், இது சாதாரண பட்டம் இல்லை. இந்த பட்டம் காற்று இல்லனாலும் பறக்கும் தெரியுமா? இதோட சிறப்பு என்னவென்றால் இந்த பட்டத்தை இப்படி தரையில் வைத்து ஒரு அடி தள்ளி நின்றால் போதும் அது தானாக பறக்கும்" Doraemon தெரியாமல் காத்தாடியின் மேல் விழுந்து விட்டான் அப்பறம் காத்தாடிக்கு பதிலாக Doraemon பறந்தான்.அனைவரும் வியப்பாக பார்த்தனர்.
டோரிமான் பட்டங்களோடு பட்டங்காக பறந்தான்.அதன் பிறகு ஒரு நதியில் விழுந்து விட்டான். நதியில் குளிரவில்லை எனக்கூறிக் கொண்டே கரைக்கு வந்தான்.அப்போது நோபிடா மற்றும் சிசுக்கா "உனக்கு ஒன்னும் ஆகவில்லையே! டோரிமான்" எனக்கேட்டனர்.அப்போது சுனிவோ "சரி சரி ஜிஆன் நாங்க அப்பறமாக போய் பட்டம் விடலாம் என்னா இப்போது காற்று அடித்து குளிர ஆரம்பிக்குது" அப்போது அந்த கருவி டோரிமானை இழுத்து பிடித்தது.அதற்கு சிசுக்கா "Doraemon இருக்கும் போது குளிர பற்றி கதைக்கவே கூடாது ஏன்னா குளிருதுனு சொன்னால் அந்த டிவைஸ் டோரிமானை இழுத்துப்பிடிக்கும்.முதல்ல இங்கிருந்து போங்க" அப்போது சுனிவோ "நிஜமாகவா? இங்க பாரு ஜிஆன் நா சூப்பர் மார்க்கெட்டுக்கு போகப்போறேன், எதுக்கு போறேனு சொல்லு பார்க்கலாம்?" அதற்கு ஜிஆன் "என்ன சொல்லவா? நீ ஏதாவது குளிராக சாப்பிட நினைக்கிறாய்!" அப்போது டோரிமான் அங்கிருந்து ஓடினான். அப்போது சிசுக்கா சுனிவோவை முறைத்து பார்த்தாள்.அப்போது சுனிவோ சிரித்துக்கொண்டிருந்தான்.வீட்டுக்கு செல்லும் வழியில் மாணவர்களுக்கு ஆசிரியர் பாடம் நடாத்தினார். அப்போது குளிர் என்ற வார்த்தை வந்தது. அப்போது ஒரு பாட்டி பாதையில் நடந்து போகும் போது குளிருது உட்கார்ந்துகிட்டு போகலாம் என கூறினார்.அதன் பிறகு தொலைக்காட்சியில் "இதை வெட்டி ஏதாவது குளிரான இடத்தில் வைக்க வேண்டும்" என கூறினர்.அப்போது நோபிடா "நீ கவலைப்படாதே, எவ்ளோ சீக்கிரமாக எடுக்க முடியுமோ அவ்ளோ சீக்கிரமாக இதை எடுக்கலாம், நாங்க வீட்டுக்கு வந்துட்டோம்" அப்போது நோபிடாவின் அம்மா "வந்துட்டியா? இரண்டு பேரும் இந்த பனி" நோபிடா "வேண்டாம்,அம்மா நீ க்க எதுவும் பேசாதிங்க,நம்ம டோரிமான் பெரிய பிரச்சினைல மாட்டிட்டு இருக்கான்., இப்போ உங்களுக்கு புரிகிறதா?" அதற்கு அம்மா "நல்லாவே புரிது, சரி நாங்க இப்போ அந்த பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்டிட்டாள் என்ன நோபிடா" அப்பறம் டோரிமான் "போத்தலில் உள்ள சீசன், இதுல குளிரகாலம்,வெயில்காலம்,இலையுதிர்காலம் என எல்லா வகையும் இருக்கிறது. முதல்ல நா இந்த வெயில்காலத்தை பாவிக்க போறேன்.
இதை பாவித்தால் தொடர்ந்து எட்டு மணித்தியாலம் இருக்கும்.எனக்கு கொஞ்சம் இதமாக இருக்கும்ல" அப்போது நோபிடா "ஆமா,ஆமா அப்படிய உன்னுடைய கருவியையும் கழட்ட முடியும். சரி நா இந்த அறையை விட்டு போறேன் நீ தனியாகவே பன்னு. உனக்கு நிம்மதியாக இருக்கும்ல" அதன்பின் பிறகு டோரிமான் வெயில்கால போத்தலுக்கு பதிலாக குளிருகாலத்தில் குளிர்கால போத்தலை திறந்து விட்டான், அந்த இடம் அப்படியே பனிக்கட்டியால் மூடியது. அப்போது அங்கு நோபிடா வந்து "என்னது இது டோரிமான்? இந்த இடம் ரொம்ப நல்லா இருக்குல" அதற்கு அவன் "இவ ஒருத்தன் உனக்கு தான் நல்லா இருக்கு எனக்கு இப்போ பாதுகாப்பு வேண்டும், நான் நல்லா மாட்டிகிட்டேன். ஏதாவது பன்னு!!" அதன்பின் நோபிடா டோரிமானுக்கு ஒரு போர்வையை கொடுத்தான்.Doraemon "இதை நீ முதலில் செய்திருக்கலாம், இவ்வளோ பிரச்சினை வந்திக்காது, ஆபத்தில் இருந்து தப்பிச்சிக்காலாம்" நோபிடா "சரி, மன்னித்துக்கொள் இப்போ வா பட்டம் விட போகலாம்" டோரிமான் "இனிமேல் என்னிடம் இதை பற்றி பேசாதே!(அந்த கருவி தலையில் இருந்து கழந்து விழுந்தது) ஒருவழியாக இது என் தலையில் இருந்து இரங்கிட்டு, இது எனக்கு ரொம்ப பிரச்சினையை கொடுத்திச்சி, இனிமேல் இதை நா பாவிக்கவே மாட்டேன்!" Doraemon அதை மேல எரிந்தான் அது ஒவ்வொரு பொருளிலும் மோதி கடைசியில் டோரிமானுடைய தலையில் வந்து விழுந்தது. அதோட இந்த Episode முடிந்தது.
How To Download?
Learn YouTube For Click Here
Read & Watch & Download All Doraemon Tamil Episode On This Site